கரூர் மாவட்டத்திலுள்ள கருங்கலாப்பள்ளி பகுதியில் மணிமாறன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியிடம் ஒரு செல்போனை கொடுத்து தன்னிடம் பேசுமாறு மணிமாறன் கூறியுள்ளார். அதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்ததால் முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவேன் என மணிமாறன் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் மணிமாறனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.