பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணியாமல் இருந்தால் ரூ.2000 அபராதம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
உலகின் பல பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில் ஒரு சில பகுதிகளில் மட்டும் அதன் இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளதாக அச்சம் நிலவியுள்ளத. இந்நிலையில் டெல்லியில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் மாஸ்க் அணியாதவர்கள் அபராதமாக 2,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “டெல்லியில் தற்போது கொரோனா அதிகரித்துள்ளதால் மக்கள் பலர் மாஸ்க் அணிந்துள்ளனர். மேலும் சிலர் அணியாமல் உள்ளனர். எனவே பொது இடங்களில் மாஸ்க் போடாமல் இருப்பவர்கள் ரூ.2000 அபராதம் செலுத்த வேண்டும்.
மாஸ்க் அணிவதால் கொரோனா பரவும் அபாயம் குறையும். எனவே சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் மஸ்குகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் ” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து கொரோனா அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்துபேசிய முதலமைச்சர் கூறுகையில், “ஒற்றுமையாக சேர்ந்து மக்களுக்கு சேவை செய்ய இது சரியான காலம் என்று அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். மக்களுக்கு இது கஷ்டமான காலம் என கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சிகளும் கட்சிகளிடமும் நான் தெரிவித்தேன். அரசியல் செய்வதற்கு இது நேரம் கிடையாது அதற்கு வாழ்நாள் முழுவதும் உள்ளது. இது மக்களுக்காக செய்யும் சேவை” என்று அவர் கூறியுள்ளார்.