மீன ராசி அன்பர்கள்..!! உங்களுடைய பேச்சு செயலில் நிதானம் என்பது கண்டிப்பாக வேண்டும். தொழில் வியாபாரத்தில் இருக்கும் சிரமங்களை தயவுசெய்து பிறரிடம் விவாதிக்க வேண்டாம். உங்களுடைய ரகசியங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம். பணவரவில் தாமதம் இருக்கும். உணவுப் பொருட்களை தரம் அறிந்து உண்ணவேண்டும். மாலை நேரங்களில் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள பாடல்களை கேளுங்கள். மனம் லேசாக காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே அனுசரித்துச் செல்வதால் அமைதி உருவாகும். விருந்தினர்கள் வருகை இருக்கும்.
செலவை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். தேவையில்லாத பொருட்களில் முதலீடு செய்ய வேண்டாம். அக்கம்பக்கத்தினரிடம் அன்பாக நடக்க முயற்சியுங்கள். யாரிடமும் வாக்குவாதம் வேண்டாம். இன்று புதிய முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் காணப்படும். நிதி மேலாண்மையில் கவனம் கொள்ளுங்கள் எப்போதும் போல் மற்றவர்கள் பார்வையில் படும் படி மட்டும் பணத்தை எண்ணவேண்டாம். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று எந்த பிரச்சனையும் இல்லை. காதலர்களுக்கும் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது நல்லது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்களின் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடக்கு
அதிர்ஷ்ட எண் 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்