Categories
மாநில செய்திகள்

மீன் விற்கும் அம்மாவை தொடர்ந்து…. மீண்டும் ஒரு பரபரப்பு வீடியோ….! ஏன் இந்த பாகுபாடு…?

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் இருந்து நரிக்குறவ இன மக்கள் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாதி, மத, இன ரீதியாக பாகுபாடு காட்டக் கூடாது என்று முதல்வர் முக ஸ்டாலின் எச்சரித்தும் மேலும் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதற்கு முன்னதாக சில தினங்களுக்கு முன்பு மீன் விற்கும் அம்மாவை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

https://www.youtube.com/watch?v=IMmEGDi3hOk&feature=emb_title

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நாகர்கோவில் அருகே நரிக்குறவர் குடும்பத்தினரை நடத்துனர் பேருந்திலிருந்து இறங்கி விடுகிறார். பேருந்தில் இருந்து இறக்கி விடும் போது நரிக்குறவர் சிறுமி கதறி அழும் வீடியோ நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதைப் பார்த்த பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |