தண்ணீரில் மூழ்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் கூலித் தொழிலாளியான அந்தோணி(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினர்கள் 2 பேருடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குமட்டிபதி வழியாக செல்லும் ஆற்றில் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது பெரிய மீன் தூண்டிலில் சிக்கியது. இதனால் மீனை பிடிப்பதற்காக ஆற்றுக்குள் இறங்கிய அந்தோணி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தோணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.