சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா. செந்தாமரை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாண்டஸ் புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலு குறைந்து வட தமிழக பகுதிகளில் நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் நாளை வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மலையும், வேறு சில இடங்களில் கனமழையும் பெய்யும்.
மேலும் கேரளா, லட்சத்தீவு, தென் கிழக்கு, மத்திய கிழக்கு, அரபிக்கடல் உள்ளிட்ட இடங்களில் இன்று மற்றும் நாளை மணிக்கு 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.