தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திரேஸ்புரத்தில் மீன் இறங்குதளத்தை மேம்படுத்தும் பணியானது சுமார் 21 கோடி ரூபாய் மதிப்பிலும் தெர்மல் நகர் பகுதியிலுள்ள மீனவர் காலனியில் கான்கிரீட் சாலை வசதிகளுடன் நீளம் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இவ்விழா சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்று இப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கனிமொழி இது தொடர்பாக கூறியதாவது, “சென்ற 10 வருடங்களாக நீங்களும் கோரிக்கை வைத்துக் கொண்டுதான் இருந்தீர்கள். ஆனால் அந்தக் கோரிக்கைகளை எவரும் செவிகொடுத்து கேட்ககூட தயாராக இல்லாத ஆட்சிதான் இந்த தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தது. உங்களுடைய பிரச்சனைகளை அவர்கள் கேட்ககூட தயாராக இல்லாதபோது எவ்வாறு நிறைவேற்றி தந்திருப்பார்கள்.
ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உங்கள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றி தரப்பட்டுள்ளது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் மீனவர்கள் அனைவரும் அவர்களுக்கு தனி வங்கி வேண்டும் என்று பலகாலமாக கோரிக்கை விடுத்து இருந்தனர். அந்த வகையில் அவர்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் மீனவர்களுக்கு என உறுதியாக தனிவங்கி அமைத்து தரப்படும்” என்று கனிமொழி எம்.பி தெரிவித்தார்.