Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு… முயற்சியால் லாபம் உயரும்… அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய சேமிப்பு உயரும் நாளாகவே இருக்கும். உங்களுடைய கூட்டு முயற்சியால் லாபம் பன்மடங்கு கிடைக்கும். நல்லவர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். உள்ளமும் உங்களுடைய பொருளாதாரம் இன்று ஓரளவு சிறப்பாகவே இருக்கும்.

அதுமட்டுமில்லை இன்று நீங்கள் யாரிடமும் கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம். இந்த விஷயத்தில் மட்டும் ரொம்ப கவனமாக இருங்கள். புதிய முயற்சிகளை முற்றிலும் தவிர்ப்பது ரொம்ப நல்லது. இப்போதைக்கு ஏதும் வேண்டாம். தொழிலை விரிவு படுத்துவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். உங்களுடைய சிந்தனைத் திறன் கற்பனை வளமும் இன்று அதிகமாகவே இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு குடும்பத்தாரிடம் அன்பாகவே நடந்து கொள்வீர்கள்.

செய்தொழிலில் ஓரளவு சில மாற்றங்களை இன்று செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். இன்று வாகனம் வாங்க கூடிய யோகமும் இருக்கும். திருமண முயற்சிகள் ஏதேனும் இருந்தால் அதற்கு உண்டான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். அனைத்துமே சரியாக இருக்கும், காதலர்களுக்கு இன்று ஒரு பொன்னான நாளாகவே அமையும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |