அதிபருக்கு விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த 6 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷியா கைப்பற்றியுள்ளது. இந்த பகுதிகளை மீட்கும் பணியில் உக்ரைன் ராணுவப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிபர் நேற்று சென்ற கார் திடீரென விபத்தில் சிக்கியுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டின் ஒரு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். நாட்டின் அதிபர் சென்ற கார் மற்றும் பாதுகாப்பு வாகனம் மீது கார் ஒன்று மோதியது. இந்த விபத்தில் அதிபர் காயமடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கும் வாகன ஓட்டுநருக்கும் மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என கூறியுள்ளது.