மாவட்ட கல்வி அதிகாரிகள் 15 பேரை தலைமை ஆசிரியர்களாக பதவி இறக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர்களின் அனுபவம் மற்றும் பணியில் உள்ள உத்வேகத்தை பொருத்து அவர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்படும். இவ்வாறான பதவி உயர்வு பெற்ற கல்வி அதிகாரிகள் 15 பேரை பதவி இறக்கம் செய்து மீண்டும் தலைமையாசிரியர்களாக மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான காரணம் என்னவென்றால் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் 20 மாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு துறை ரீதியான பயிற்சியும் நிறைவு பெற்றுவிட்டது. ஆனால் தமிழகத்தில் தற்போது 5 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. இதனால் 5 பேர் மட்டுமே பணியமர்த்தப்பட்ட முடியும். எனவே மீதம் உள்ள அதிகாரிகளை பணியில் அமர்த்துவதற்காக ஏற்கனவே மாவட்ட அதிகாரியாக இருக்கும் 15 பேரை பதவி இறக்கம் செய்து அரசு தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களை அந்த பணியில் அமர்த்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.