Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… பிரபல நாட்டில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்…!!!!!

கடந்த 2019 -ஆம் வருடம் இறுதியில் சீனாவின் உகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகளை எல்லாம் தவிக்க வைத்தது. தற்போது அமெரிக்கா, இந்தியா என பெரும் பாதிப்புக்கு ஆளான நாடுகள் எல்லாம் பெருமளவில் கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்தி உள்ளது. இந்நிலையில் சீனாவில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை கொண்டு வருவதற்காக ஊரடங்கு பொது முடக்கங்கள் மற்றும்  கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. இது ஒரு காலகட்டத்தில் மக்களுக்கு பெரும் விரக்தியை ஏற்படுத்தியது. இதனால் அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து  மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கட்டுப்பாடுகள் விலகிக் கொள்ளப்பட்டு பரிசோதனை மையங்கள் மூடப்பட்டது. மேலும் பொதுமக்கள் லேசான அறிகுறிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.  கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் அதிபர் ஜின்பிங்  மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கோஷங்கள் முழக்கப்பட்டது. இதற்கு வெளிநாட்டு சக்திகள் தான் காரணம் என பிரான்சுக்கான சீன தூதர் லு ஷாயே குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் உள்ளூர் அரசு நிர்வாகங்கள் தான் கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் அங்கு 15 நாட்களாக கொரோனா அலை மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதில் சீன வெளியுறவு  அமைச்சக அதிகாரிகள், ஊழியர்கள், பீஜிங் தூதரக பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் பலர் கடுமையான காய்ச்சலுடன் கிளினிக்குகளின் வெளியே காத்திருக்கின்றனர். இது தொடர்பான வீடியோக்கள்  சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |