Categories
உலகசெய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா … சீனாவின் பிரபல பூங்கா மூடல்… வெளியான அறிவிப்பு…!!!!

சீனாவில் கொரோனா  தொற்று காரணமாக டிஸ்னி  பொழுதுபோக்கு பூங்கா காலவரையின்றி மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் கொரோனா  வேகம் எடுக்க தொடங்கியிருக்கிறது. இதனை தொடர்ந்து அங்கு பல்வேறு நகரங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சீனாவில் அதிக மக்கள்தொகை கொண்ட பெரிய நகரமான ஷாங்காய் நகரிலும் தற்போது கொரோனா  வேகமாக பரவி வருகிறது.

இருப்பினும் அங்கு இதுவரை ஊரடங்கு  அமல்படுத்தப்படவில்லை. அதேசமயம் முடிந்தவரை மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இந்நிலையில் பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஷாங்காய் நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் காலவரையின்றி மூடுவதாக டிஸ்னி நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை பொழுதுபோக்கு பூங்கா மூடப்பட்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |