நாசா ஆர்ட்டெமிஸ்-1 42 நாட்களில் 1.3 மில்லியன் மைல்கள் பயணிக்கும் நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு அருகில் ஓரியன் விண்கலத்தை பறக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி கடந்த 29ஆம் தேதி இந்திய நேரப்படி 6 மணிக்கு ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்ப பணி தொடங்க திட்டமிட்டது. கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த விண்கலம் புறப்படுவதற்கான கவுன்ட்- டவுண் தொடங்கப்பட்டது.
ஆனால் எதிர்பாராத விதமாக சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக 40 வது நிமிடத்தின் போது கவுன்ட்-டவுண் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ஆர்ட்டெமிஸ் திட்டம் ஹைட்ரஜன் குழு, ராக்கெட் ஏவுதல் இயக்குனருடன் அடுத்த கட்டம் நடவடிக்கைகளை பற்றி ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ்-1 வருகின்ற செப்டம்பர் 3 ஆம் தேதி விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.