Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் வடிவேலு… ஹீரோவாக நாய் சேகர்… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நாய் சேகர் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் மிகவும் புகழ்பெற்றவர் வடிவேலு. அவருக்கு இருக்கும் ரசிகர்கள் ஏராளம். அவரின் பெயரை சொன்னாலே அவரின் நகைச்சுவை மட்டுமே அனைவர் மனதிலும் வரும். அவருக்கு பல்வேறு பேரும் புகழும் உண்டு. அதில் வைகைப்புயல் வடிவேலு என்பது மிக சிறந்தது. அப்படிப்பட்ட பல்வேறு புகழுக்கு உரியவர் நீண்ட நாட்களாக திரையுலகில் வரவில்லை. அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் பழைய வீடியோக்கள் மற்றும் மீம்ஸ்கள் மூலமாகவே அவரது ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நாய் சேகர் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2006 ஆம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் சுந்தர்சி கதாநாயகனாக நடித்த படம் தலைநகரம். அந்தப் படத்தில் வடிவேலு நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் காமெடி செய்திருப்பார். இந்நிலையில் தற்போது அந்த கதாபாத்திரத்தை கதாநாயகனாக வைத்து முழு படத்தையும் சுராஜ் இயக்கப்போவதாக கூறப்பட்டுள்ளது

Categories

Tech |