அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. தற்போது நடிகர் ரஜினி இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்தப் படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது . இதையடுத்து நடிகர் ரஜினியின் 169 வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது . இந்நிலையில் ரஜினியின் 169 வது படத்தை மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ரஜினியின் எந்திரன், பேட்ட உள்ளிட்ட படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.