Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மீண்டும் மெரினா கடற்கரை மூடல்?… மாநகராட்சி ஆணையர் தீவிர ஆலோசனை…!!!

மெரினா உள்ளிட்ட கடற்கரையில் மக்கள் கூட தடை விதிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் காலையில் நடைப் பயிற்சிக்கு மட்டும் அனுமதி தரவும், மற்றபடி மக்கள் கூட தடை விதிக்கவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் முகாம்களில் பரிசோதனை செய்யலாம். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் முழுமையாக கொரோனாவை கட்டுப்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |