மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, வரும் 5 ஆம் திகதி அன்று முதல்வராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலில், நந்திகிராம் தொகுதியில், முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய மம்தா பானர்ஜி பாஜகவுடன் சேர்ந்த சுவேந்து அதிகாரியிடம் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆனால் சட்டப்பேரவைத் தொகுதியில் தோல்வியை சந்தித்தாலும், முதல்வராக பொறுப்பேற்க சட்டத்தில் இடம் இருக்கிறது. எனவே மீண்டும் மம்தா பானர்ஜி மாநில முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.
மேலும் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க சட்டப்பேரவை குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து ஆளுநரான ஜக்தீப் தன்கரை நேற்று இரவு 7 மணியளவில் சந்தித்து ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்குவங்க சட்டப்பேரவையில் சுமார் 292 சட்டமன்ற தொகுதிகளில் 213 தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது.