கனடாவில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு இரண்டாவது முறையாக லாட்டரியில் பரிசு விழுந்தது அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
கனடாவில் ஒன்றாறியோவின் தோர்ன்சில்லை பகுதியைச் சேர்ந்த வின்செண்ட் என்பவர் தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் லாட்டரி சீட்டு வாங்குவதில் மிகவும் ஈடுபாடு உடையவர். இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு வின்செண்ட்க்கு பெரிய லாட்டரி பரிசு கிடைத்ததுள்ளது. பரிசு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்த வின்செண்ட் மீண்டும் லாட்டரி சீட்டு வாங்குவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது வின்சென்ட்க்கு மீண்டும் லாட்டரியில் அதிஷ்டம் அடித்து ஒரு மில்லியன் டாலர் பரிசாக கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சியுற்ற அவர் ஆர்வத்துடன் தன் மனைவியிடம் தனக்கு பரிசு கிடைத்ததை கூறியுள்ளார். இதனைக் கேட்ட அவரது மனைவி மீண்டும் பரிசா! என ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் தான் கிடைத்த பரிசுத்தொகையை முதலீடு செய்ய உள்ளதாகவும், தான் மீண்டும் மீண்டும் லாட்டரி சீட்டு வாங்குவேன் எனவும் கூறியுள்ளார்.