தேவையான பொருள்கள்
பழுத்த தக்காளி – 4
புழுங்கல் அரிசி – 200 கிராம்
காய்ந்த மிளகாய் – 4
இஞ்சி -ஒரு சிறு துண்டு
கருவேப்பிலை -சிறிதளவு
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
புழுங்கலரிசியை ஊறவைத்து. இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி, இவற்றை சேர்த்து அடை மாவு பதத்தில் அரைக்கவும். கருவேப்பிலை பொடியாக நறுக்கிப் போடவும். உப்பு சேர்த்து கலந்து அடையாக வார்த்து. இருபுறமும் எண்ணெய் விட்டு. வெண்ணிறமாக வேகவிட்டு எடுக்கவும். சுவையான அடை தயார். தேவைப்பட்டால் சிறிது முருங்கை இலையையும் சேர்த்துக்கொள்ளலாம் .சுவை இன்னும் அதிகமாக இருக்கும்.