Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மீண்டும், மீண்டும் அதே தவறை செய்கிறீர்களே”… தனுஷை சாடும் நெட்டிசன்ஸ்…!!!

நானே வருவேன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இணையவாசிகள் விளாசி வருகின்றனர்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது தன் அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் “நானே வருவேன்” திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் சூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தனுஷ் ஸ்டைலாக இருக்கும் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக இருந்த போஸ்டர்களும் தனுஷ் புகை பிடிப்பது போன்று இருந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ளப் புகைபடத்திலும் தனுஷ் புகைபிடிப்பது போல் இருக்கின்றது.

முன்னணி நடிகராக இருக்கும் நீங்களே இப்படி புகைப்பிடிப்பதை ஊக்குவிக்கலாமா? படம் போடுவதற்கு முன்னால் “புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு” என போட்டால் மட்டும் பத்தாது என தனுஷை சாடி வருகின்றனர் நெட்டிசன்ஸ். மேலும் நெட்டிசன்ஸ் கூறியுள்ளதாவது, “ஸ்டைலாக போஸ் கொடுக்க வாயில் சிகரெட் தேவையில்லை. உங்களின் இந்த போஸ்டரை பார்த்து ரசிகர்களும் சிறார்களும் புகைபிடிக்க ஆரம்பிப்பார்கள். அதனால் இனி இப்படி செய்யாதீர்கள்” என கூறியுள்ளனர்.

Categories

Tech |