ஓமிக்ரான் BF.7 வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. கொரோனாவை கட்டுக்குள் வைப்பது தொடர்பாக பிரதமர் மோடி அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக அமல்படுத்தி கண்காணிக்கவும், தடுப்பூசி செலுத்துவது, பூஸ்டர் டோஸ் போடுவதை உறுதி செய்யுமாறும். பொது இடங்களுக்கு வருவோர், மாஸ்க் அணிவதை உறுதி செய்யுமாறும் மாநிலங்களை அறிவுறுத்த மத்திய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.