மகேஷ் பாபு அடுத்ததாக நடிக்கும் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபுவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் பரசுராம் இயக்கத்தில் சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இன்று நடிகர் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபுவின் 28-வது படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. திரிவிக்ரம் இயக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஏற்கனவே மகரிஷி படத்தில் மகேஷ் பாபு, பூஜா ஹெக்டே இருவரும் இணைந்து நடித்திருந்தனர். தற்போது மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.