Categories
தேசிய செய்திகள்

மீண்டும் போராட்டம் நடத்த விவசாயிகள் தீவிரம்….. போலீஸ் குவிப்பு….!!!!!

பிரதமர் மோடி அளித்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டி விவசாயிகள் இன்று முதல் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டதால் டெல்லியை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் ஓராண்டு காலம் அமர்ந்து விவசாயிகள் நடத்திய தர்ணா போராட்டம் நாட்டையே உலுக்கியது.2020ம் ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய 3 வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 2020 நவம்பர் 26ம் தேதி போராட்டம் தொடங்கியது.

இதை தொடர்ந்து 3 சட்டங்களையும் திரும்ப பெறுவதாக தெரிவித்த பிரதமர் மோடி, விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்திருந்தார். ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதிமொழியை மோடி அரசு நிறைவேற்றவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மீண்டும் தொடங்கும் போராட்டம் தங்கள் இறுதி மூச்சு உள்ளவரை நடைபெறும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |