அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான குரல் ஓங்கி ஒலித்திருக்கின்ற நிலையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஆனால் அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கில் இன்று பரபரப்பான தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு செல்லாது எனவும் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பிருந்த நிலையை நீடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது எடப்பாடி தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.
இருந்தபோதிலும் தீர்ப்பின் முழு விவரத்தை சுட்டிக்காட்டி தங்களுக்கு சாதகமான விஷயங்கள் இருப்பதாக எடப்பாடி ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக எடப்பாடி தரப்பு வழக்கறிஞரான பாபு முருகவேல் நீதிமன்ற தொடர்பான தகவலை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அதில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற வாத பிரதிவாதங்களின் அடிப்படையில் 23/6/2022 அன்று நடைபெற்ற பொதுக்குழுவிற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி எந்தவித தடயமும் இல்லை. அதே நேரம் 11/7/2022 அன்று நடைபெற்ற பொதுக்குழு செல்லாது இருந்த போதிலும் மூன்றில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் விருப்பப்பட்டால் பொதுக்குழு நடத்த வேண்டும்.
ஆனால் ஓபிஎஸ் அதில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் தவறும் பட்சத்தில் ஆணையரை நியமித்து பொதுக்குழுவை நடத்த நீதிமன்றம் உத்தரவிடும் எனவும் தீர்ப்பு வழங்கிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி அடுத்த பொதுக்குழு தங்களுக்கே சாதகமாக முடியும் என எடப்பாடி ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் பொதுக்குழுவில் இருக்கும் அனைவருமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றனர். இது பொதுச் செயலாளர் தீர்மானம் கொண்டுவர கைகொடுக்கும் அது மட்டுமல்லாமல் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை முழுவதுமாக ஆராய்வோம். மேலும் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையின் பெயரில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடக்கிடுவோம் என நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த சூழலில் முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான ஜெயக்குமார் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசும் போது கட்சியின் சட்ட திட்டங்களின் அடிப்படையில் தான் பொதுக்குழு கூட்டப்பட்டிருக்கிறது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதலின் பேரில் தான் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அதனால் ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு கிடைத்த வெற்றி என்பது நிரந்தரமானது அல்ல அதிமுக விவகாரத்தில் சட்ட வல்லுநர்கள் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை படி எடுக்கப்படும் என கூறியுள்ளார்.