பிரபல நாட்டில் மீண்டும் பிரதமராக பெஞ்சமின் தேர்வாகியுள்ளார்.
பிரபல நாடான இஸ்ரேலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்களின் ஆதரவை பெற்று மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராகிறார். இவருக்கு காபந்து அரசின் பிரதமராக இருந்த யாயிர் லாபிட் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது பாலஸ்தீனியர்கள் மற்றும் அருகில் உள்ள அரபு நாடுகள் இடையே ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 1948-ஆம் ஆண்டு தான் இஸ்ரேல் அங்கீகரிக்கப்பட்ட நாடாக அறிவிக்கப்பட்டது. மேலும் இதன் அருகில் உள்ள பாலஸ்தீனம் அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராடி வருகிறது.
ஆனால் இரண்டு தரப்பு நாடுகளும் ஒன்றையொன்று கடுமையாக தாக்கிக் கொள்வது சமீப காலமாக மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தேர்தலில் நெதன்யாகு வெற்றி பெற்றதை தொடர்ந்து காசாவில் இருந்து 4 ராக்கெட்டுகள் வீசப்பட்டது. இந்த தாக்குதலில் எவ்வளவு பேர் உயிரிழந்தனர் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மேலும் இதற்கு இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஜெனின் பகுதியில் அல்-குத்ஸ் படையின் தளபதி படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.