Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் படிக்க கிளம்பிய…. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…!!!!

தமிழகத்தில் முதன் முதலாக பதவியேற்ற மு.க. ஸ்டாலின் தனது ஆட்சியை தொடங்கிய நான்கு மாதங்களில் கொரோனா நெருக்கடி, காலியான கஜானா என பல்வேறு சவால்களையும் தாண்டி வெற்றிகரமாக செயலாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து அவரது ஆட்சியை பற்றியும், அவரது அமைச்சரவை அமைச்சர்கள் பற்றியும் பிற மாநிலங்களிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் செயல்பாடுகளான பள்ளிகளில் உள்கட்டமைப்பு வேலைகளை தீவிரப்படுத்துதல் மற்றும் இந்த பொது முடக்கத்திலும் அரசு பள்ளிகளில் அதிகமாக மாணவர்கள் சேர அவர் எடுத்த முயற்சி ஆகியவை மக்களை மிகவும் ஈர்த்தவை மற்றும் அவரது பணிகளில் முக்கியமானவை ஆகும்.

எம்சிஏ பட்டதாரியான அவர் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் சாப்ட்வேர் டெவலப்பராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். இந்நிலையில் அவர் தனது 43 வயதில் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இவரது குடும்பமும் ஸ்டாலின் குடும்பமும் 3 தலைமுறைகளாக நட்பு பாராட்டி வருகின்றனர். அன்பில் தர்மலிங்கமும் கலைஞர் கருணாநிதியும் அதன் பின் அடுத்த தலைமுறையான அன்பில் பொய்யாமொழியும் மு.க.ஸ்டாலினும், மூன்றாம் தலைமுறையான அன்பில் மகேஷும் உதயநிதியும் முறையே மூன்று தலைமுறையாக நட்பு பாராட்டி வருகின்றனர்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி தேசிய கல்லூரியில் உடற்கல்வித் துறையில் ஆய்வு படிப்பை மேற்கொண்டு வருகிறார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணைவேந்தர் மணிசங்கர், திருச்சி கல்லூரி முதல்வர் சுந்தரராமன் ஆகியோரிடம் தனது முன்படிவத்தை அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமர்ப்பித்துள்ளார். இவர் உடற்கல்வி முக்கியத்துவம் வாய்ந்தது என்று வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி கல்வித்துறை அமைச்சராக உமீண்டும் படிக்க கிளம்பிய…. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…!!!!ள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர் என்பவர் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை முன்மொழிவது போல அவரது இச்செயல் உள்ளது இவரது இந்த செயல் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |