சில்க் சுமிதாவின் வாழ்க்கை கதை அவள் அப்படித்தான் என்ற பெயரில் மீண்டும் படமாக்கப்படுகிறது;
சில்க் சுமிதா அவர்கள் 1979-ல் நடிகையாக அறிமுகமாக்கப்பட்டார். வண்டி சக்கரம் படம் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு ,கன்னட மொழிகளில் 450 படங்கள் நடித்தவர் சில்க் சுமிதா அவர்கள். சில்க் சுமிதா 1996-ல் மரணமடைந்தார். இவர் தனது கவர்ச்சியான நடிப்பால் பெரிய ரசிகர் பட்டாளத்தை தனக்கு என்று வைத்திருக்கிறார். இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்துக்கொண்டு ஏற்கனவே டர்டி பிக்சர் என்ற திரைப்படம் வெளியானது. இந்நிலையில் சில்க் சுமிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து அவள் அப்படித்தான் என்ற பெயரில் மீண்டும் அவருடைய வாழ்கை கதை படம் வெளியாக உள்ளது.
இப்படத்தை கே .எஸ் மணிகண்டன் அவர்கள் இயக்குகிறார். தெலுங்கு நடிகை அனுசியா பரத்வாஜ் சில்க் சுமிதா அவர்களின் வேடத்துக்கு தேர்வாகி இருப்பதாகவும் ,விஜய்சேதுபதி அவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வலைதளங்களில் நேற்று பரவின . மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் அவர்கள் கூறுகையில் ,”அனுசுயா பரத்வாஜ் சில்க் சுமிதா அவர்களின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என வெளியான தகவல் உண்மை இல்லை எனவும், சிலுக்கு சுமிதா அவர்களின் கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமான நடிகையை தேடிக் கொண்டிருக்கிறோம் எனவும், மேலும் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க உள்ளார் என்றும் தகவல் பரவிக் கொண்டிருந்தது அவர் நடித்தால் மிகவும் மகிழ்ச்சி எங்களுக்கு, மேலும் பொங்கலுக்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் “என கூறியுள்ளார் .