ஊரடங்கால் வீட்டிலிருந்த சீரியல் நடிகைகள் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நடிகைகள் படப்பிடிப்பில் பங்கு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதனால் சீரியலின் கதை களத்தில் மாறுபாடு ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கண்ணான கண்ணே’ சீரியல் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி இந்த சீரியலில் வாசுகி மற்றும் யமுனா கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர்கள் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்து உள்ளதாக தெரியவந்துள்ளது.