உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 5 மாதங்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டு வருகின்றது. ரஷ்யாவின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரைனில் உள்ள பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. ஆனாலும் உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்துப் போரிட்டு வருவதால் இன்னும் சில நகரங்களைப் பிடிக்க முடியாமல் ரஷ்யா திணறி கொண்டு வருகின்றது . உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தப்போவதாக ரஷ்ய அதிகாரிகள் அண்மையில் அறிவித்துள்ள தகவலின் அடிப்படையில் அந்நாட்டின் மீது மும்முனை தாக்குதலை ரஷ்ய தொடுத்துள்ளது.
உக்ரைனில் உள்ள 2-வது பெரிய நகரமான கார்கீவ் மீதுதான் ரஷ்யா படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றது. ரஷ்யா ராக்கெட் தாக்குதலையும் நடத்தி வருகின்றது. ரஷ்ய படைகளின் இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் 16 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டோன்பாஸ் என்ற பிராந்தியத்தில் உள்ள மக்கள் வசிக்கும் இடங்களில் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தும் சாத்தியம் இருப்பதால் அதை முறியடிக்கும் வகையில், உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய பாதுகாப்புத்துறை மந்திரி அறிவுறுத்தியிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.