கனடாவில் தடுப்பூசி கட்டாயம் என்பதை எதிர்த்து லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கனடாவில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் கடந்த மாத இறுதி முதல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இரண்டு வாரத்திற்கு மேலாக வளர்ந்து வரும் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா, கனடாவை இணைக்கும் மிகப் பெரிய தூதர் பாலத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன் காரணமாக அங்கு போக்குவரத்து முடங்கியது. மேலும் போக்குவரத்து முடக்கத்தால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லாரி டிரைவர்களின் போராட்டத்திற்கு எதிராக கனடா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலத்தில் நடைபெறும் போராட்டத்தை உடனடியாக நிறுத்த உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் பாலத்தை முற்றுகையிட்டிருந்த இருந்து போராட்டக்காரர்களை போலீசார் நேற்று முன்தினம் இரவு விரட்டியடித்துள்ளனர். மேலும் பாலத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரிகள் அனைத்தும் நீக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பாலம் மீண்டும் திறக்கப்பட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.