தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே சிறுமிகளின் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு செய்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் சிலர் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் சமூக வலைத்தளங்களில் சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் சார்பில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து குற்றவாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆபாச படம் பார்த்து, பதிவேற்றம் செய்வது அதிகரித்தால் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
Categories
மீண்டும் தலைதூக்கும் ஆபாச படங்கள் பதிவேற்றம்…. அதிர்ச்சி….!!!!
