நடிகை சாய் பல்லவி மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத் திரையுலகில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படத்தில் இவர் மலர் டீச்சர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் தமிழில் தியா, மாரி-2, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்திருந்தார். இதன்பின் நடிகை சாய்பல்லவி தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது இவர் ஷ்யாம் ஷிங்க ராய் , லவ் ஸ்டோரி, விராட பருவம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் கதாநாயகியை மையமாக வைத்து உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.