மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை மாட்டுதாவனி கொடைக்கானல் ஊட்டி, பெங்களூரு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து காய்கறி கொண்டு வரப்படுகிறது. தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து வருவதால் விலை அதிகரித்து வருகிறது. பொதுவாக கார்த்திகை மாதம் ஐயப்பன் கோவில் சீசன் என்பதால் காய்கறிகளின் தேவை அதிகமாக இருக்கும்.
இதுபோன்ற சூழ்நிலையில் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ 100 ரூபாய், சில்லறை 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மேலும் காய்கறிகளின் விலை,
ஒரு கிலோ உருளைக்கிழங்கு 50 ரூபாய்க்கும், ஒரு கிலோ சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கும், ஒரு கிலோ அவரைக்காய் 80 ரூபாய்க்கும், ஒரு கிலோ பீன்ஸ் 100 ரூபாய்க்கும், ஒரு கிலோ கத்தரிக்காய் மொத்த விலையில் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெண்டைக்காய் மொத்த விலையில் 85 ரூபாய்க்கும், ஒரு கிலோ கேரட் மொத்த விலையில் 80 ரூபாய்க்கும், ஒரு கிலோ பீட்ரூட் மொத்த விலையில் 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.