Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகை… வெளியான சூப்பர் தகவல்…!!!

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. அடுத்ததாக தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Keerthy Suresh

இந்நிலையில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் சாணிக்காயிதம், தெலுங்கில் போலா ஷங்கர், சர்காரு வாரி பாட்டா போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Categories

Tech |