Categories
உலக செய்திகள்

மீண்டும் சீனாவில்…. வேகமெடுக்கும் கொரோனா…. 580 பேர் பாதிப்பு….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

உலகின் முதல் கொரோனா தொற்று கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவின் உகன் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு  உலகம் முழுதும் பரவி பெரிய அளவு தாக்கத்தை கொரோனா தொற்று ஏற்படுத்தியது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதன்படி சீனாவின் முக்கிய நகரமான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து சீனாவின் உள்ளூர் நகரங்களில் நேற்று ஒரு நாளில் 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஷாங்காய் நகரில் தான் அதிகமான  கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிக தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |