சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று 626 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில் 455 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த 24 மணி நேரத்தில் அங்க கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆகும் உள்ளது. மேலும் சீனாவில் இதுவரை கொரோனா உறுதி செய்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,29,294 அதிகரித்துள்ளது.