நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
2016 ஆம் வருடத்திற்கான பெமினா மிஸ் சவுத் இந்தியா என்ற இந்திய அழகி பட்டத்தை வென்றவர் மீரா மிதுன். இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். ஆனால் இவர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து போலியான வயதை காட்டி அழகி போட்டியில் பங்கேற்றதை அறிந்து அவரது அழகி பட்டம் மீண்டும் பெறப்பட்டது. இவர் பலரை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்ததால் பல சர்ச்சைகளுக்கு ஆளானார்.
இந்நிலையில் தற்போது பட்டியல் இன மக்களை பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டததற்கு அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுனை போலீசார் சென்ற வருடம் கைது செய்து சில மாதங்கள் சிறையில் இருந்த இவர் ஜாமீனில் வெளியில் வந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு இவர் தொடர்ந்து ஆஜராகவில்லை என்பதால் பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் இவரின் மேல் பிடிவாரண்ட் போடப்பட்டது. இந்நிலையில் இவரை சைபர் கிரைம் போலீசார் சென்னையில் கைது செய்யதனர். நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய மீராவுக்கு ஏப்ரல் 4ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு இருக்கின்றது.