கொரோனா பரவலை குறைத்தால் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. பல மாநிலங்களில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தொற்று பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் பொது இடங்களில் அதிகமாகக் கூட்டம் கூடுவதாக கூறப்படுகின்றது. இப்படி நடந்தால் மீண்டும் தொற்று தீவிரமாக பரவக்கூடும்.
இதனால் பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. முக்கியமாக மலை பிரதேசங்களுக்கு செல்வோர் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் மீண்டும் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல் சந்தை, பொது இடம், சுற்றுலாத்தலங்களில் கொரோனா விதிகள் பின்பற்றப் படுவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.