Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் காதலில் விழுந்தாரா பிரபாஸ்….. பாகுபலியின் புதிய தேவசேனா யார் தெரியுமா….?

பிரபல தெலுங்கு நடிகர் பாலிவுட் நடிகையுடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் அளவில் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களில்தான் நடித்து வருகிறார். இவர் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில், ராமாயண இதிகாசமாக உருவாகும் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் ராமனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி சனோன் ஹீரோயினாக நடிக்க, சைப் அலிகான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் பிரபாஸ் தற்போது கீர்த்தி சனோனுடன் டேட்டிங்கில் இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசுகிறது.

அதாவது நடிகை கீர்த்தி காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது திடீரென பிரபாஸ் அவருக்கு போன் செய்து பேசியுள்ளார். இதன் காரணமாகத்தான் தற்போது பிரபாஸ் தற்போது கீர்த்தியுடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாகுபலி படத்தில் பிரபாஸ் நடிக்கும் போது அனுஷ்காவை காதலித்து வருகிறார் என்று தகவல்கள் பரவியது. அதன் பின் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவருமே நாங்கள் நண்பர்களாக தான் பழகி வருகிறோம் என்று கூறிய பிறகு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலும் பிரபாஸ் மீண்டும் ஒரு நடிகையுடன் டேட்டிங்கில் இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது சரிவர தெரியவில்லை.

Categories

Tech |