Categories
சினிமா

மீண்டும் கதை திருட்டு?…. சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் அட்லீ?…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

ராஜா ராணி என்ற திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் வெற்றிபெற்றாலும், இன்றுவரை மௌனராகம் படத்தின் காப்பிதான் ராஜா ராணி என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ராஜா ராணி திரைப்படத்தை அடுத்து தெறி,மெர்சல்,பிகில் என்று விஜய் உடன் கைகோர்த்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். இந்த திரைப்படங்களுக்கும் கதைதிருட்டு எனும் சர்ச்சையில் அட்லீ சிக்கி கொண்டார்.

தற்போது அட்லீயின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகிவரும் படம் ஜவான். பாலிவுட் நடிகரான ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துவரும் இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துவருகிறார். அத்துடன் வில்லனாக விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் படப் பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன்புகூட இந்த படத்தின் மோஷன் டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அட்லீ இப்போது இயக்கிவரும் ஜவான் படத்தின் கதையும், விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த பேரரசு திரைப்படத்தின் கதையும் ஒன்றாக உள்ளது என தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் மீண்டுமாக கதைதிருட்டு சர்ச்சையில் அட்லீ சிக்கிகொண்டார். ஆகவே அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..

Categories

Tech |