சூப்பர் ஹிட் சீரியல்களை மீண்டும் ஒளிபரப்பு செய்ய விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டிக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். இருப்பினும் மெட்டி ஒலி, சித்தி, சரவணன் மீனாட்சி போன்ற சில பழைய சீரியல்கள் ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட்டாக இருந்து வருகின்றன. ஏற்கனவே சன் டிவியில் மெட்டி ஒலி சீரியல் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதேபோல் ஜீ தமிழ் டிவி செம்பருத்தி சீரியலின் பழைய எபிசோடுகளை மீண்டும் ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் விஜய் டிவி பழைய ஹிட் சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பிரஜின், பாவனி இணைந்து நடித்த சின்னத்தம்பி சீரியல் மீண்டும் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது பாவனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதை அடுத்து சின்னத்தம்பி சீரியலின் சில காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் சின்னத்தம்பி சீரியலை மீண்டும் ஒளிபரப்பி டி.ஆர்.பி-யை ஏற்ற தொலைக்காட்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த சீரியல் விஜய் டிவியில் அல்லாமல் அதன் மற்றொரு சேனலான விஜய் சூப்பரில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.