Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் ஒப்பந்தமான ராஷ்மிகா … முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன்… அப்பா-மகள் செண்டிமெண்ட் கதையாம்…!!!

நடிகை ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில் ,தற்போது மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் .

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா . இவர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார் . இதையடுத்து இவர் சமீபத்தில் மகேஷ்பாபுவுடன் நடித்த ‘சரிலெரு நீகேவ்வரு’ படம் சூப்பர் ஹிட் அடித்தது . தற்போது இவர் நடிகர் அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா’ படத்தில் நடித்து வருகிறார் . மேலும் இவர் நடிகர் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார் . இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ளது ‌.

Rashmika Mandanna joins Amitabh Bachchan in Vikas Bahl's next | Celebrities  News – India TV

சமீபத்தில் நடிகை ராஷ்மிகா பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் ‌. சித்தார்த் மல்கோத்ரா நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது . இந்நிலையில்  நடிகை ராஷ்மிகா மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . இவருடன் பிரபல நடிகர் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் ‌. அப்பா – மகள் பற்றிய சென்டிமெண்ட் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நீனா குப்தா உட்பட பலர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது .

Categories

Tech |