ஐரோப்பாக் கண்டத்தில் கடந்த வாரம் மட்டும் முன்பு இருந்ததைவிட 9% அதிகமாகனோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் இருந்து உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது .அதனால் பொருளாதார சரிவு மற்றும் உயிரிழப்புகள் போன்ற பெரும் துன்பங்களுக்கு ஆளாகி கொண்டிருக்கிறோம். இந்தக் கொரோனா வைரஸ் குறிப்பாக ஐரோப்பாவில் தான் அதிகமாக பரவி வருகிறது .கொரோனா சிலமாதங்களுக்கு முன் குறைந்தாலும் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் ஃபிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று குறைந்ததால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் தற்போது உருமாறிய கொரோனாவால் ஊரடங்கு இன்னும் அதிகமாக கடுமையாக்கப்பட்டு வருகிறது.
ஐரோப்பிய நாடுகளான இத்தாலி ,டென்மார்க், அயர்லாந்து ஜெர்மனி ,நெதர்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற 27 நாடுகளில் அதிக அளவில் பரவி வருகிறது. இதுமட்டுமின்றி தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியா ,ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் அதிகமாக பரவி வருகிறது. கடந்த வாரம் மட்டும் ஐரோப்பாவில் 10 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முன்பிருந்ததை விட 9 % அதிகமாக பரவுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஐரோப்பா கண்டத்தில் நேற்று முன்தினம் மட்டும் 1.53 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் .
தலா 23 ஆயிரம் பேர் இத்தாலி மற்றும் பிரான்சில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய மண்டல இயக்குனர் ஹன்ஸ் கூறுகையில் ,உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் இருந்தால் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.