தெலங்கானாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் கொரோனா அசுர வேகத்தில் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பு கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டசபையில் பேசிய அவர், ” பொருளாதார ரீதியாக நாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம், எனவே மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தினால் மக்கள் மற்றும் அரசின் நிதி நிலைமை கேள்விக்குறி ஆகிவிடும். மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம், மீண்டும் பொதுமுடக்கம் இருக்காது” என தெரிவித்தார்.