Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் உடல் எடையை அதிகரிக்கும் அனுஷ்கா…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் அனுஷ்கா. இவர் அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்து போனது. பாகுபலி 2 படத்திற்கு பின் சில காலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் அனுஷ்கா மீண்டும் உடனடியாக அதிகரிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. அதாவது இவர் தமிழில் ஒரு படமும் தெலுங்கில் ஒரு படமும் நடிக்க தயாராக இருந்த நேரத்தில் தெலுங்கு இயக்குனர் ஒருவர் சொன்ன கதை பிடித்து போய் அந்த கதாபாத்திரத்திற்காக உடல் எடையை அதிகரிக்க சம்மதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த அப்டேட் அனுஷ்கா ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |