கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்து தமிழகம் செல்வோருக்கு இபாஸ் கட்டாயம் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது. அதில் முக்கியமான ஒன்று பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என்பது. அதன்பிறகு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இ பாஸ் கட்டாயமில்லை என்று அரசு அறிவித்தது.
இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்து தமிழகம் செல்வோருக்கு இ பாஸ் கட்டாயம் என இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷ் என அறிவித்துள்ளார். அதன்படி இடுக்கி மாவட்டத்தில் இருந்து குமுளி, போடிமெட்டு மற்றும் சின்னார் உள்ளிட்ட எல்லையோர செக்போஸ்ட்கள் வழியாக தமிழகம் செல்வோருக்கு இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இ பாஸ் இல்லாதவரை தமிழக அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. மேலும் eregister.tnega.org என்ற இணையதளத்தில் இ பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.