நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனுஷும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2004 வருடம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தனுஷ் ஐஸ்வர்யா இரண்டு பேரும் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். விவாகரத்து அறிவிப்பிற்குப் பின்னர் தனுஷ் பெயரை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீக்கியுள்ளார்.
இதற்கிடையே சமீபத்தில் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினரின் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சிக்கு முதன்முறையாக இருவரும் ஒன்றாக வந்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்கள் விவாகரத்து முடிவை ரத்து செய்து மீண்டும் இனிய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது இந்த செய்தியால் ரசிகர்கள் பலர் உற்சாகமடைந்துள்ளனர்.