சூர்யா மற்றும் ஜோதிகா மீண்டும் படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் திரையுலகிற்கு வந்தபோது பல விமர்சனங்களை சந்தித்தாலும் பிறகு தனது விடாமுயற்சியின் மூலம் வெற்றிப் படங்களை தந்து பிரபல நடிகர் ஆனார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களை தயாரிக்கவும் செய்கிறார். இவர் தயாரித்த கடைசி திரைப்படம் ஜெய்பீம். இது நல்ல வெற்றி தந்தது. இவர் நடித்த “எதற்கும் துணிந்தவான்” திரைப்படம் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சூர்யா மற்றும் அவரின் மனைவி நடிகை ஜோதிகா பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் காதலிக்கும் போது இணைந்து படங்களில் இணைந்து நடித்து வந்தனர். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சினிமாவிற்கு இடைவெளிவிட்டு தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஜில்லுனு ஒரு காதல். இந்நிலையில் தற்போது பாலா இயக்குகின்ற திரைப்படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.