Categories
உலக செய்திகள்

மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் கொரோனா…. ஒரே நாளில் இவ்ளோ உயிரிழப்பு?…. பிரபல நாட்டில் அதிர்ச்சி….!!!!

ஒமிக்ரான் மற்றும் அதன் துணை வைரஸால் தூண்டப்பட்ட கொரோனா அலை தென்கொரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேற்று முன்தினம் தென்கொரியாவில் கொரோனாவால் 1 லட்சத்து 7 ஆயிரத்து 916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் நேற்று 93 ஆயிரத்து ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை தென்கொரியாவில் 1 கோடியே 63 லட்சத்து 5 ஆயிரத்து 752ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் 203 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்து 92ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |