டெல்லியில் வடகிழக்கு பருவ மழையால் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதற்குள், மக்கள் குளிரால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்கே ஜெனா மணி பேசும்போது, பஞ்சாப் அரியானா, ராஜஸ்தான், வடக்கு மற்றும் உத்திரபிரதேசம் மேற்கு மற்றும் மத்திய பிரதேசம் வடக்கு உள்ளிட்ட வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் வருகிற 21-ஆம் தேதி வரை கடுமையான குளிர் நிலவும் என்று கூறினார்.
இந்த நிலையில், டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக இருக்கிறது. காற்றின் தரக் குறியீடு 316 ஆக உள்ளது. காற்று மாசுபாட்டின் வழக்கு விசாரணை சில நாட்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. மேலும் காற்று மாசுபாட்டை குறைக்க எடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளைப் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இதேபோன்று மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களிலும் காற்றின் தரம் மோசம் என்ற பிரிவில்தான் இருக்கிறது.